செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் கேள்விக்குறியே: வாக்களித்த சீமான்

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வாக்களித்தார்.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. திமுக கட்சித்தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜீ, தெலுங்கான மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை ஆகியோர் இன்று வாக்களித்தனர்.

இந்நிலையில் சென்னை வளரசவாக்கம் வாக்குச்சாவடிக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வரிசையில் நின்று வாக்களித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் கேள்விக்குறியாகவே இருக்கும். தேர்தல் முறையில் மாற்றம் தேவை. காந்தி சொல்வதை பின் பற்றும் விதமாக மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்க வேண்டும். வாக்கிற்குக் காசு வாங்கக் கூடாது என்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.

Advertisement:

Related posts

ஐ.பி.எல் போட்டிகளில் புதியதாக இரண்டு அணிகள் சேர்ப்பு!

Karthick

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ம் தொடக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

Saravana

கோவை தெற்கில் கமல்ஹாசன் வெற்றிபெறமுடியாது: எல்.முருகன் பேச்சு

Jeba