இந்தியா முக்கியச் செய்திகள்

2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர்!

டெல்லியில் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கும் மேலாக நாடு கண்ட மிக உயர்ந்த தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவாகும். மேலும் குஜராத்தில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, ஒரே நாளில் 2,815 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, மகாராஷ்ட்ராவிலும் ஒரே நாளில் 49,447 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பிரதிப்சிங் ஜடேஜாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டார். மேலும், அனைத்து மக்களும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வேண்டுக்கோள் விடுத்தார். இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Advertisement:

Related posts

“நாங்கள் அனைவரும் உழைப்பால் வளர்ந்துள்ளோம்” முதல்வர் பழனிசாமி!

Karthick

லெஹெங்காவில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்!

Jayapriya

ஒடிசாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

Saravana