வாகனம்

ரூ.30,000க்கு குறைவான விலையில் பெஸ்ட் ஸ்கூட்டி வாங்கணுமா?

scooty price below 30,000

குறைந்த விலையில் அதிக திறன் கொண்ட ஸ்கூட்டி வாங்குவது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா தாக்கத்தில் மிடில் கிளாஸ் மக்களின் பொருளாதாரம் அடியோடு சரிந்துவிட்டது. வேலை பறிபோவது ஒருபுறம் என்றால், பல நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளமும் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இதனால், குண்டூசி வாங்குவதாக இருந்தால் கூட ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக நமது அன்றாட வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியுமா? தினசரி தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாட்களை நகர்த்த முடியுமா?

இப்படிப்பட்ட சூழலில், குறைந்த விலையில் சிறந்த ஸ்கூட்டிகள் வாங்குவது குறித்து இங்கு பார்க்கலாம்.

AVON E Plus

இந்த பட்டியலில் முதலில் இடம்பெறுவது AVON E Plus எனும் எலக்ட்ரிக் ஸ்கூட்டியாகும். இந்தியாவில் இந்த ஸ்கூட்டியின் (Ex-Showroom) ஆரம்ப விலை ரூ.25,000. குறிப்பாக சென்னையில் இதன் On-Road Price ரூ.27,000ல் இருந்து தொடங்குகிறது.

இந்த ஸ்கூட்டியின் சிறப்பம்சங்கள் இங்கே,

எஞ்சின் – எலக்ட்ரிக் BLDC மோட்டார்
அதிகபட்ச ஆற்றல் – 220 W
Range -50 KM/ Full Charge
அதிகபட்ச வேகம் – 24 KMPH
சார்ஜிங் நேரம் – 5-7 மணி நேரம்
இரு வீல்களும் Drum Brake கொண்டுள்ளது.

AVON E Lite

சென்னையில் AVON E Lite ஸ்கூட்டியின் (ex-showroom) விலை ரூ.28,000.

எஞ்சின் – எலக்ட்ரிக் BLDC மோட்டார்
அதிகபட்ச ஆற்றல் – 232 W
Range -51 KM/ Full Charge
அதிகபட்ச வேகம் – 25 KMPH
சார்ஜிங் நேரம் – 4-8 மணி நேரம்
இரு வீல்களும் Drum Brake கொண்டுள்ளது.

Komaki Super

இந்த பட்டியலில் இடம்பெறும் அடுத்த ஸ்கூட்டர் Komaki Super மாடலாகும். சிறந்த ஆற்றல் கொண்ட மோட்டாரில் இது முக்கிய இடம் வகிக்கிறது. பிளாஷ் ஒயிட் மற்றும் சிலேட் சில்வர் ஆகிய இரு நிறங்களில் இது கிடைக்கிறது.

சென்னையில் இதன் Ex-Showroom விலை ரூ.29,500 ஆகும்.

எஞ்சின் – எலக்ட்ரிக் Hub மோட்டார்
அதிகபட்ச ஆற்றல் – 350-500 W
Range – 60 KM/ Full Charge
அதிகபட்ச வேகம் – 35 KMPH
இரு வீல்களும் Drum Brake கொண்டுள்ளது.
எடை – 45KG.

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற இரு சக்கர வாகனத்தை வாங்கி இஎம்ஐ இம்சையில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisement:

Related posts

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு பாதுகாப்புக்கான 4 நட்சத்திர ரேட்டிங்!

Arun

Aprilia SXR 160 ஸ்கூட்டரின் முன்பதிவு தொடக்கம்; இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Jayapriya

கார் பிரேக்கை பராமரிப்பது எவ்வாறு?

Jayapriya

Leave a Comment