ஒடிசா மாநிலத்தில் வரும் 8 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Advertisement: