செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி கோரிய மனு தள்ளுபடி!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தெற்கூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் பட்டியலின மக்கள் வாக்களிக்க சென்ற போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மனுவில் குற்றம்சாட்டினார். உள்ளாட்சித் தேர்தலில் தனி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், சட்டமன்றத் தேர்தலுக்கும் தனி வாக்குச் சாவடியை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Related posts

அதிகரிக்கும் கொரோனா; 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு!

Ezhilarasan

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

Gayathri Venkatesan

திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவில்லை; முதல்வர் விமர்சனம்

Saravana Kumar