தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பொதுத்தேர்தல் சவாலாக இருந்தது: சத்யபிரதா சாகு

சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடந்து வாக்குப்பதிவு எண்ணிக்கையானது நேற்று மே 2 ஆம் தேதி நடைபெற்றது. இன்னும் அதிகாரப்பூர்வமாக 234 தொகுதி முடிவுகளும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை..இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சட்டமன்ற பொதுத்தேர்தல் மிகவும் சவாலானதாக இருந்ததாகவும் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என கூறிய அவர், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்றபின் ஆளுநரிடம் தேர்தல் முடிவுகள் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்… மறு எண்ணிக்கை குறித்து எந்த அரசியல் கட்சியும் கோரததால், மறு வாக்கு எண்ணிக்கை தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

Advertisement:

Related posts

லண்டனில் இருந்து தேனி திரும்பிய நபருக்கு கொரோனா உறுதி!

Saravana

பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா?

Saravana Kumar

முதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார்: அமித் ஷா பாராட்டு!

Niruban Chakkaaravarthi