இந்தியா முக்கியச் செய்திகள்

விண்ணிற்கு செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படம்!

பிப்ரவரி மாத இறுதிக்குள் சதீஷ் தவான் என்ற செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை சார்ந்த தனியார் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ், பிப்ரவரி இறுதிக்குள் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. அந்த செயற்கைக்கோளுக்கு சதீஷ் தவான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம், பகவத் கீதை நூல், மற்றும் 25 ஆயிரம் பொதுமக்களின் பெயர்களையும் சேர்த்து விண்வெளிக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளானது விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம் மற்றும் தகவல் தொடர்பு குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன் கூறுகையில், சதீஷ் தவான் செயற்கைக்கோள்தான் நாங்கள் விண்ணுக்கு அனுப்ப இருக்கும் முதல் செயற்கைக்கோள் எனவும் செயற்கைக்கோளில் விண்ணுக்கு அனுப்பப்பட வேண்டிய மக்களின் பெயர்கள் குறித்து கேட்டப்போது, ஒரு வாரத்திற்குள் 25 ஆயிரம் பெயர்கள் கிடைத்ததாகவும் தெரிவித்தார். விண்வெளி அறிவியலில் மக்களின் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.

Advertisement:

Related posts

கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்!

Jeba

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்

Dhamotharan

நாராயணசாமி அரசின் பயணம் அன்று முதல் இன்றுவரை!

Gayathri Venkatesan

Leave a Comment