செய்திகள் முக்கியச் செய்திகள்

சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

திமுக, அதிமுகவை வீழ்த்துவதே அமமுக – தேமுதிக கூட்டணியின் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக – தேமுதிக கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் சுமூகமாக கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார்.

சசிகலாவின் மானசீக ஆதரவு அமமுக – தேமுதிக கூட்டணிக்கு இருப்பதாக குறிப்பிட்ட டிடிவி தினகரன், திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்துவதற்காகவே தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:

Related posts

அரசு காலி பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி!

Gayathri Venkatesan

ஒலிம்பியாவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால காளை சிலை!

Niruban Chakkaaravarthi

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

Gayathri Venkatesan