செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”

தமக்கு நீண்ட அரசியல் அனுபவம் இருப்பதாகவும், தமது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடையவில்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்ட சரத்குமார், தாமும், கமல்ஹாசனும் சொந்த பணத்தை செலவழித்து சேவை செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த மரியாதை காரணமாக, பத்து ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்ததாக அவர் தெரிவித்தார். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால், வருங்கால தலைமுறை ஏமாந்து போகும் எனத் தெரிவித்த சரத்குமார், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் அகற்ற வேண்டியதுதான் இப்போதைய முக்கிய தேவை எனக் கூறினார்.

Advertisement:

Related posts

”எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாட அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

Jayapriya

மதுரையை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ!

Jeba

ஹோலி கொண்டாடி மகிழ்ந்த பிரபலங்கள்!

L.Renuga Devi