சட்டம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ஏ. பி சாஹியின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் இந்த பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Advertisement:

Related posts

வருமான வரி வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு!

Niruban Chakkaaravarthi

நீண்டு கொண்டு போகும் இயக்குநர் பாலா மீதான வழக்கு விசாரணை!

Niruban Chakkaaravarthi

8 வழி சாலை திட்டம் : உச்சநீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகள் அதிருப்தி

Niruban Chakkaaravarthi

Leave a Comment