சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளை மணல் புயல் தாக்கியுள்ளது.
சீனாவில் வரலாறு காணாத அளவிற்கு மணல் புயல் இன்று தாக்கியுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் வடமேற்கு பகுதிகள் முழுவதும் மணல் காற்று வீசுகிறது. காற்றில் மணல் கலந்து வானம் முழுவதும் புழுதி படிந்துள்ளது. இந்த புயலானது மங்கோலியாவின் மத்திய பகுதிகளுக்கு பரவி, கான்சு, சான்சி, ஏபெய் ஆகிய மாகாணங்களையும் பாதித்துள்ளது என்று சீனா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்யில் காற்றின் மாசுப்பாட்டின் அளவு 500 புள்ளிகளை கடந்துள்ளது. மேலும் காற்றில் உள்ள தூசி மற்றும் மாசுபாட்டின் அளவு 8,000 மைக்கிரோ கிராமாக உள்ளது.
சராசரியாக சிறந்த காற்றின் அளவு 0 முதல் 50 புள்ளிகளாக ஆக இருக்க வேண்டும் மற்றும் தூசியின் அளவு 50 மைக்கிரோ கிராமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது சீனாவில் வீசி வரும் மணல் புயலால் காற்றில் மாசின் அளவு ஆபாயகட்டத்தை எட்டியுள்ளது.
எல்லா ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் சீனாவில் மணல் புயல் ஏற்படுவது வழக்கம். ஆனால் இதுபோல் ஒரு மாபெரும் புயல் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டது இல்லை என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காடுகள் அழிக்கபடுவதாலும் மணல் அரிப்பின் காரணமாகவும் இதுபோன்ற இயற்கை சீற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Advertisement: