செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

காவு வாங்க காத்திருக்கும் நீர்த்தேக்க தொட்டி!

ஓமலூர் அருகே கே.மோரூர் கிராமத்தில் காவு வாங்க காத்திருக்கும் நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி எப்போது யார் தலையில் விழும் என்ற அச்சத்தால் உடனடியாக அந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஒன்றியம் கணவாய் புதூர் ஊராட்சி கே மோரூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. தீவட்டிபட்டியிலிருந்து பொம்மிடி செல்லும் சாலையை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து ஆங்காங்கே கான்கிரிட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக சூறைகாற்றி வீசினால் உடனே விழுந்துவிடும் நிலையில் இந்த தொட்டி உள்ளது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாடு நிறுத்தப்பட்டது. நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். உயிர் சேதம் ஏற்பட்ட பின்புதான் நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீர்த்தேக்க தொட்டியை அகற்றி பொது மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என புதூர் ஊராட்சி கே மோரூர் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement:

Related posts

இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்தில் அனுமதி இல்லை

Gayathri Venkatesan

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி

Karthick

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!

Jayapriya