செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஷகிலா!

நடிகை ஷகிலா, தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மலையாள திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் ஷகிலா. மலையாள சூப்பர் ஸ்டார்களாக கொடிகட்டிப்பறந்த மோகன்லால் மம்மூட்டி படங்களைவிட இவர் நடித்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம். திரைதுறையில் முக்கிய இடத்தை தனது வசமாக்கிய ஷகிலா திரைத்துறையை விட்டு சில காலங்களுக்கு விலகி இருந்தார். சமீபத்தில் ’குக் வித் கோமாளி’ என்ற ரியலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிக்ழ்ச்சியால் ஷகிலா மீது இருந்த கண்ண்டோட்டம் முற்றிலுமாக மாறியது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் அவர் தன் வசப்படுத்தினார். மேலும் அவர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், அவரது துணிச்சலான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் அவர் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் அவருக்கு மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசி அவர் தமிகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகமாகி உள்ளது என்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் ‘நடிகை என்பதைத் தாண்டி ஒரு தனி அடையாளத்தையும் தனி அதிகாரத்தியும் பெற விரும்புகிறேன். எனது தேவைக்காக நான் அரசியலுக்கு வரவில்லை” என்று கூறினார்.

Advertisement:

Related posts

தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!

Gayathri Venkatesan

மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்

Gayathri Venkatesan

புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா!

Niruban Chakkaaravarthi