செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி எந்த தலைவரும் சொல்லாதது : சைதை துரைசாமி!

அதிமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்கிற செய்தி, உலகத்தில் எந்த தலைவரும் சொல்லாதது என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி கூறினார். அந்த மகத்தான திட்டம் நிறைவேற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் நரிக்குறவ சமூக மக்களுக்கு வீடு அமைத்துத் தந்தது அதிமுக அரசுதான் என கூறினார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நரிக்குறவ மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி தருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் விரிவு, வரதாபுரம், நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி பிரச்சரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நரிக்குறவர் சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பிற்கு மனிதநேய அறக்கட்டளை மூலமாக பல்வேறு சேவைகளை செய்து வருவதாகவும், இளைஞர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்தவும், அனைவருக்கும் கல்வி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

Jeba

“கருப்புப் பணம் வைத்திருப்பவர்களே கவலைப்பட வேண்டும்” – சி.டி.ரவி!

Karthick

”7 பேர் விடுதலை: ஆளுநரிடம் முறையான பதில் இல்லை”- மு.க.ஸ்டாலின்!

Jayapriya