செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைக்கப்படும்: சைதை துரைசாமி!

சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைக்கப்படும் என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு, அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சைதாப்பேட்டை பகுதியை வளர்ச்சிடையச் செய்வதற்காக தான் எடுத்த நடவடிக்கைகள் ஏராளம் எனக் கூறினார். மேலும், சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது நவீன இயந்திரங்கள் மூலம் நீர் நிலைகளை சீரமைத்ததுபோல, சைதாப்பேட்டை தொகுதியும் நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு நாளை அடிக்கல்!

Jeba

மநீம ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி வழங்குவோம்: கமல்ஹாசன்

Ezhilarasan

சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: முத்தரசன்

Saravana