இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள் விளையாட்டு

கொரோனாவிலிருந்து மீண்டார் சச்சின்!

இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பினார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. முன்னதாக லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி, 2011 ஆம் நடந்த உலகக் கோப்பையில் இந்தியா வெற்றிபெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தன் சக வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தார்.

தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சச்சின் வீடு திரும்பினார். இருந்தபோதும் மருத்துவர்கள் அவரை சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துள்ளனர்.

Advertisement:

Related posts

பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டது குறித்து விளக்கிய அமைச்சர்

Niruban Chakkaaravarthi

பல முனை போட்டி அதிமுகவுக்கு சாதகம்தான் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan

ஊரடங்கில் உணவைத் தேடி 130 கி.மீ ஹெலிகாப்டரில் பயணித்த முதியவர்!

Karthick