இந்தியா முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி!

ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-க்கு (Sputnik V) இந்தியா அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டுடன் தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டில் வந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது. தினமும் 1 லட்சத்திற்கு அதிகமான மக்கள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணீகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 40 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் தற்போது அதிகம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுவதால், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி-க்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் ரெட்டிஸ் ஆய்வகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கான ஆய்வுகளை நடத்தியது. மேலும் ரஷ்யாவில் நடத்திய ஆய்வில், இத்தடுப்பூசியானது கரோனாவில் இருந்து மக்களை காப்பதில் 91.6 சதவிகிதம் திறனுடன் செயல்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ரெட்டீஸ் ஆய்வகம் விர்ச்சோ பயொடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க உள்ளது.

இதுவரை இந்தியாவில் 10.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடந்து வரும் தடுப்பூசித் திருவிழாவில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

Advertisement:

Related posts

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

L.Renuga Devi

அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்!

L.Renuga Devi

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Ezhilarasan