இந்தியா முக்கியச் செய்திகள்

Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!

ரஷ்ய நாட்டின் ஸ்புட்நிக் வி (Sputnik V) தடுப்பூசியின் 1,50,000 டோஸ்கள் இந்தியாவிற்கு இன்று வந்தடைந்தன.

இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இந்தியாவில் முதல் கட்டமாக கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி ரஷ்ய நாட்டின் தடுப்பூசியான ஸ்புட்நிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ரஷ்யாவின் தடுப்பூசியான ஸ்புட்நிக் வி விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தது. முதல் கட்டமாக 1,50,000 டோஸ்கள் ரஷ்ய அரசு மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நடிகை கஸ்தூரி பரப்புரை!

Gayathri Venkatesan

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

Karthick

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Ezhilarasan