முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் ருக்மணி விஜயகுமாரின் யோகா வீடியோ!

நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ருக்மணி விஜயகுமாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரை பூர்விகமாகக் கொண்ட நடிகை ருக்மணி விஜயகுமார், பரதநாட்டியம் மற்றும் யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பரதநாட்டியம் மற்றும் யோகா பயிற்சியாளராகவும் செயல்பட்டுவருகிறார். தன்னுடைய நடனங்களையும் யோகா பயிற்சிகளையும் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதன்மூலம் இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றும் அவருடைய ரசிகர்கள் அவருடைய பதிவுகளுக்கு பேராதரவு கொடுத்துவருவது வழக்கமாக உள்ளது. பெரும்பாலும் யோகா பயிற்சி செய்யும்போது அதற்கேற்றவாறு மார்டன் ஆடைகளை அணிந்தே பயிற்சி செய்யும் ருக்மணி, வித்தியாசமான முயற்சியாக சேலை அணிந்து யோகா செய்து அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். சேலை அணிந்து சாதாரண யோகாசனங்கள் செய்வது வழக்கமானதுதான்.

ஆனால் தலை கீழாக நிற்பது, முதுகை முழுமையாக வளைப்பது போன்ற யோகாசனங்களை சேலை அணிந்து செய்வது மிகவும் கடினமானதாகும். இந்நிலையில் சேலை அணிந்தும் மிகவும் இலாவகமாக கடினமான யோகாக்களையும் ருக்மணி செய்துள்ளதே அவர் வெளியிட்டுள்ள வீடியோவின் சிறப்பம்சமாகும். இவருடைய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் ஆனந்த தாண்டவம், பொம்மலாட்டம், காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களிலும், ஷமிதாப் என்ற இந்தி திரைப்படத்திலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக செயல்பட்டுள்ளார்.

Advertisement:

Related posts

டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Karthick

அமெரிக்க நாடாளுமன்றம் மீது திடீர் தாக்குதல்!

Karthick

ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனைதவிர வேறுஎதையும் உற்பத்தி செய்ய முடியாது : புகழேந்தி

Ezhilarasan