செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகம் முழுவதும் ரூ. 412 கோடி பணம் பறிமுதல் – சத்யா பிரதா சாஹு தகவல்

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ. 412 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் கூட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.91.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அது யாருடைய பணம் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7,600 லிட்டர் மதுப்பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.”

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.65 லட்சமும், சைதாப்பேட்டை தொகுதியில் ரூ.1.3 கோடியும் ரூ.11.38 லட்சம் குறிஞ்சிப்பாடியிலும் கோவை நகரில் ரூ.98 லட்சமும் வேலூர் மாவட்டத்தில் ரூ.1.06 கோடியும் ஆயிரம்விளக்கு தொகுதியில் ரூ. 1.23 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக மாநிலம் முழுவதும் நேற்று வரை ரூ.412 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் தேர்தலுக்குப் பின் திருப்பி தரப்படும்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்று இரவு 7 மணிக்கு மேல், அரசியல் கட்சிகள் பரப்புரையும் மேற்கொள்ளக்கூடாது, ஊடகங்கள் அரசியல் விளம்பரங்கள் வெளியிடக்கூடாது. மேலும் ஊடகங்களின் விவாதங்கள் அனைத்தும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக ஊடகங்கள் பணம் வாங்கிக்கொண்டு, யாருக்கு சாதகமாகவும் செய்தி வெளியிடக் கூடாது. வாக்குப்பதிவு நாள் அன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, வாக்குப்பதிவை கண்காணிக்க உள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “வரும் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் சாவடிகளுக்கு, திடீர் ஆய்வு செல்லும் திட்டமில்லை. நாளை மாலைக்குள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டு விடும். வாக்குச் சாவடிக்குள், வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. வாக்குச்சாவடிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.” என்றார்.

Advertisement:

Related posts

கேக் வெட்டுவதில் தகராறு….இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்…!

Saravana

பெட்ரோல் விலை உயர்வு; நொங்கு வண்டி ஓட்டி வந்து பெட்ரோல் போட சொன்ன இளைஞர் – வைரலாகும் வீடியோ

Saravana Kumar

இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!

Jayapriya