சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஓடஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஜெரோம் பிரபு என்பவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெட்டுவாங்கேணி பகுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். நேற்று நண்பகலில் வெளியில் சென்ற அவரை பின்தொடர்ந்த 6 பேர் கொண்ட கும்பல், வீட்டின் அருகிலேயே ரவுடி ஜெரோம் பிரபுவை ஓடஓட வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரவுடி ஜெரோம் பிரபு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்குவந்த நீலாங்கரை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரவுடி ஜெரோம் பிரபு மீது புதுச்சேரியில் 4 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 2019ம் ஆண்டு அன்பு ரஜினி என்பவரை கொலை செய்த சம்பவத்தில், முன்விரோதம் காரணமாக அன்பு ரஜினியின் நண்பர்கள் ஜெரோம் பிரபுவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Advertisement: