இந்தியா முக்கியச் செய்திகள்

மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு ரத்து செய்யப்பட்ட அரசு விமான சேவை!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரகாண்ட் செல்வதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மும்பை விமான நிலையத்தில் அரசு விமானத்திற்காக காத்திருந்தார். ஆனால், கடைசி நிமிடம் வரை விமானம் புறப்பட அனுமதி வழங்கப்படாத காரணத்தினால் அவர் தனியார் விமானத்தில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் அம்மாநில அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது சொந்த ஊரான உத்தரகாண்ட்டிற்கு செல்வதற்காக முன்னதாக அரசு விமானத்தை ஆளுநர் தரப்பிலிருந்து முன்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால், அந்த விமானத்திற்கு இறுதி நிமிடம் வரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையேயான உரசல்களை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து முதல்வர் உத்தவ் தாக்ரே முறையான மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுதிர் முங்கந்திவார் கூறுகையில், மாநில அரசின் இந்த நடவடிக்கையால் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பரூக் அப்துல்லா சொத்துக்கள் முடக்கம்!

Niruban Chakkaaravarthi

வேளாண் சட்டங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Saravana

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

Dhamotharan

Leave a Comment