போராடுவதற்கான உரிமையானது எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தினை சட்டத்திற்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 12 சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை மறு பரிசீலனை செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோர்கள் கொண்ட அமர்வு இந்த மனு மீதான விசாரணையை தொடங்கியது.

இதில், நீடித்த கருத்து வேறுபாடு காரணமாக நடத்தப்படும் போராட்டங்கள் மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் நடத்தப்பட வேண்டும் என்றும், இம்மாதிரியான போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான உரிமையானது எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும், ஜனநாயகமும், கருத்து வேறுபாட்டினை வெளிப்படுத்தும் உரிமையும் கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மறுசீராய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: