தமிழகம்

காஞ்சிபுரம் கல்குவாரியில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் மீட்பு பணிகள் இன்றும் தொடர்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் மதூர் கிராமத்தில், பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அங்கிருக்கும் குவாரி ஒன்றில், சுமார் 200 மீட்டர் ஆழத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, மலையிலிருந்து கற்கள் மற்றும் மணல் சரிந்து, தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதில் ஈரோட்டை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியானது நடைபெற்றது. ஜேசிபி வாகனங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று மாலை இருள் சூழ்ந்தால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனங்கள் கல்குவாரியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு அருகில் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை முதல் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்க உள்ளன.

Advertisement:

Related posts

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

Nandhakumar

இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

Jeba

அதிமுகவிற்குள் உள்ள சின்னச்சின்ன பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு வெற்றிக்காக பணியாற்ற வேண்டும்! – ஓபிஎஸ்

Saravana

Leave a Comment