செய்திகள்

கூவம் கரையோரத்தில் குடியிருந்த மக்களுக்கு நகர்ப்புறத்திலே வீடு ஒதுக்குமாறு கோரிக்கை!

கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை பெரும்பாக்கத்திற்கு குடியமர்ந்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்யமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள காந்திநகர் பகுதியில் வசிக்கும் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி, சென்னைக்கு அப்பால் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் குடியமர்த்தபடுகின்றனர். இதனை மறுபரிசீலனை செய்யுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னைக்கு அப்பால் பெரும்பாக்கத்தில் குடியமர்த்தபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் காந்திநகர் மக்களை, 77வது வட்டம் கேசவ பிள்ளை பூங்கா பகுதியிலுள்ள குடியிருப்புகளை அரசு அவர்களுக்கு வழங்குமாறும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

காவல்துறையினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Niruban Chakkaaravarthi

சர்க்கரை ரேசன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றி கொள்ளலாம்: தமிழக அரசு

Niruban Chakkaaravarthi

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்!

Nandhakumar

Leave a Comment