செய்திகள் வாகனம்

மற்ற SUVகளுக்கு போட்டியாக களமிறங்கும் ரெனால்ட்டின் KIGER!

கார்கள் உலகில் ரெனால்ட் நிறுவனத்திற்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. வலிமையான என்ஜின்கள்தான் அதன் தனி சிறப்பம்சம்.

அந்த வகையில் தனது புதிய கிகர் காரினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது ரெனால்ட். தொடக்க விலையாக 5.45 லட்சமாக உள்ள இந்த காரில், என்ஜினின் குதிரைத்திறனின் அடிப்படையில் விலை மாறுபட்டுள்ளது.

72 குதிரைத்திறனில் என்ஜின் கொண்ட கார் 5.45 லட்சமாகவும், அதிகபட்சமாக 100 குதிரைத்திறன் என்ஜின் கொண்ட கார் 9.55 லட்சமாகவும் விற்பனைக்கு வந்துள்ளது. ரெனாலட் நிறுவனத்தில் ஏற்கெனவே டஸ்டர் ரக கார் பெறும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது SUV ரகத்தில் கிகர் களமிறக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் பயணிப்பவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இந்த கார் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என கா் விரும்பிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் பின்னடைவாக பார்க்கப்படுவது, இந்த காரில் சன்ரூப் இல்லை என்பதுதான்.

ஆனால், மற்ற வசதிகளில் ரெனால்ட் தரமான சேவையை வழங்கியுள்ளது. 16 இன்சி அலாய் வீல் உங்களுக்கு நிச்சயம் மோசமான பயண அனுபவத்தை கொடுக்காது. மேலும், LED விளக்குள் இந்த காரினை மற்ற கார்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

நான்கு வேரியன்ட்களில் களமிறக்கப்பட்டுள்ள கிகர், ஆறு வகையான நிறங்களில் கிடைக்கின்றது. உட்பகுதியை பொறுத்த அளவில் 8.0 இன்ச் அளவில் தொடுதிரை வசதி, சக்தி வாய்ந்த ஸ்பீக்கர்கள் என அசத்தியுள்ளது.

என்ஜினை பொறுத்த அளவில், 72 குதிரைத்திறன் பெட்ரோல் என்ஜினாகவும்,100 குதிரைத்திறன், டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டதாகவும் ரெனால்ட் வழங்கியுள்ளது. இரண்டு வகைகளும் 5-ஸ்பீட் கியர் அமைப்பினை கொண்டதாக உள்ளது. ஸ்போர்ட்ஸ் மாதிரியில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், Eco and Sports என இரு தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது உள்ள மஹிந்தா, வுன்டாய், டாடா நெக்சான், போன்ற கார்களுக்கு மாற்றாகவும், தனக்கான இடத்தையும் கிகர் எப்படி தக்க வைத்துக்கொள்ளப்போகிறது என்பது கேள்விக்கு நுகர்வோர்கள்தான் விடையாக இருக்கப்போகிறார்கள்.

Advertisement:

Related posts

வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Saravana

தேவேந்திர குல வேளாளர் குறித்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!

Jeba

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!

Saravana

Leave a Comment