இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

ரூ.1லட்சம் வரை விற்பனை செய்யப்படும் “ஹாப் ஷூட்ஸ்”

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கராம்நித் கிராமத்தில் விவசாயி அம்ரிஷ் சிங் என்பவர் பயிரிட்ட புதிய வகை ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறிகள் கிலோவிற்கு ரூ.1லட்சம் வரை விற்கப்படுகிறது.

இந்த வகையான விலையுயர்ந்த ஹாப் ஷூட்ஸ் என்ற காய்கறிகளை இந்தியாவில் முதல் முறையாக அவர் துணிந்து, பயிரிட்டு வருகிறார். ஹாப் ஷூட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த தாவரம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்டது.


இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஹாப் ஷூட்ஸ் காய்கறி விதைகளை அம்ரிஷ் சிங் வாங்கியுள்ளார். இதுபோன்ற தாவரத்தின் ஒவ்வொரு பகுதியும் பழம், பூ முதல் தண்டு வரை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும், இது காசநோய் , தூக்கமின்மை, தோல் பளபளப்பு , மன அழுத்தம், கவலை போன்ற நோய்களுக்கு இயற்க்கை மருந்தாக இருக்கிறது. இந்த வகை காய் ‘பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள் மற்றும் கசப்பான சுவையூட்டும் தன்மை கொண்டுள்ளதால் இது பீர் தயாரிப்பிலும் பயன்படுத்தபடுகிறது என கூறப்படுகிறது. ஆகவே இந்த ஹாப் ஷூட்ஸ் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில்,“ இது போன்ற புதியவகை ஹாப் ஷூட்ஸ் என்ற காய்கறி பயிரிடல் முயற்சி விவசாயிகளின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்” என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த செய்தி சமூகவலைதலங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement:

Related posts

பண்ருட்டி தொகுதி வேட்பாளர் வேல்முருகனுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு!

Gayathri Venkatesan

முப்படைகளிலும் பணியாற்றிய ஒரே அதிகாரி; 100வது பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்!

Jayapriya

பெங்களூரூவில் ஸ்தம்பித்துப்போன வாடகை கார் சேவை!

Karthick