தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் இன்று நடைபெற்றது.
சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகைக்கான பணிகள் நடைபெற்றன. சென்னை சந்தோம் பகுதியில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. மொத்தம் 25 பேருக்கு தடுப்பூசி போடும் ஒத்திகை நடத்தப்பட்டது.
பூந்தமல்லி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. முதல்கட்டமாக மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், லேப் டெக்னிஷன் உள்ளிட்ட 25 பேருக்கு தடுப்பூசி போடும் ஒத்திகை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, நிலாக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு தடுப்பூசி போடும் ஒத்திகை நடைபெற்றது. இதனை சுகாதாரநலப்பணி இணை இயக்குநர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
Advertisement: