செய்திகள்

கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் தமிழகம்!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 மாதங்களுக்கு பிறகு, 500க்கு கீழ் சென்றது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 494 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 40 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 4 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது. 517 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,லட்சத்து 23 ஆயிரத்து 518 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 51 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்து 16 ஆயிரத்து 733 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை தமிழகம் வருகை!

Niruban Chakkaaravarthi

அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக எண்ணுகிறது: முதல்வர் பழனிசாமி

Niruban Chakkaaravarthi

பெங்களூருவில் காரை கடித்துக்குதறிய வங்கப் புலி; வைரலாகும் வீடியோ!

Saravana

Leave a Comment