ஆசிரியர் தேர்வு விளையாட்டு

அஸ்வின் அபாரம்…. இங்கிலாந்து 178 ரன்களில் சுருண்டது… இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு…

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்து 178 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் ரிஷாப் பண்ட் 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். வெளிநாட்டில் அறிமுகமான போட்டியில் அரைசதம் அடித்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், அரைசதம் அடித்த நிலையில், இந்திய மண்ணில் அறிமுக போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார்.

வாஷிங்டன் சுந்தர் ஒரு புறம் நங்கூரமாக நின்று அணியை மீட்க போராடிய போதும், மறுபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்தை விட 241 ரன்களை பின்தங்கி இருந்த போதும், இந்தியாவுக்கு FOLLOW – ON வழங்கப்படவில்லை. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இன்னிங்சின் முதல் பந்திலேயே, பர்ன்ஸ்-ஐ வெளியேற்றினார் அஸ்வின். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், இங்கிலாந்து அணி தடுமாற்றம் அடைந்தது. அஸ்வின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால், 178 ரன்களில் இங்கிலாந்து சுருண்டது.

தொடர்ந்து 420 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித்சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 4ம் நாள் இறுதியில் இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களை எடுத்துள்ளது.

Advertisement:

Related posts

நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

Nandhakumar

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர், என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் மோரிஸ்!

Nandhakumar

ராஹேனா, ஜடேஜா சிறப்பான ஆட்டம்… 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை!

Saravana

Leave a Comment