செய்திகள்

கொரோனாவால் தவிக்கும் அஸ்வின் குடும்பத்தார்!

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தனது பெயரை ட்விட்டரில் நீக்கிவிட்டு, முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று மாற்றி உள்ளார். மேலும் அஸ்வின் குடும்பத்தில், 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து நீங்கினார். ’கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுடன் இருப்பது அவசியம்’ என்று அஸ்வின் கூறியிருந்தார். இந்நிலையில் அஸ்வின் குடும்பத்தில் உள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட், ’ எங்கள் குடும்பத்தில் இருக்கும் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனை மற்றும் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த தொற்றிலிருந்து மீண்டு வர உடல் வலிமையை விட மன வலிமை மிகவும் அவசியம். எங்களுக்கு உதவ அனைவரும் இருந்தனர். மேலும் அவர்கள் உதவி செய்தனர். ஆனால் இந்த தொற்று உங்களைத் தனிமைப்படுத்தும். இந்த தொற்றிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் அணிவதும், தடுப்பூசி செலுத்துவதும்தான் ஒரே வழி. ‘என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Advertisement:

Related posts

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய அமீர்கான்!

Jeba

அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!

Karthick

ஓட்டுக்காகப் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்: டிடிவி தினகரன்

Karthick