குற்றம் தமிழகம்

சிறுமிக்கு திடீரென எற்பட்ட உடல்நலக்குறைவு.. மருத்துவர் கூறியதை கேட்டு அதிர்ந்த பெற்றோர்!

உடல் நலக்குறைவு காரணமாக மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோர், அவரின் உண்மை நிலையறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சர்க்கரை மல்லூர் கிராமத்தைச் சேர்ந்த14 வயது சிறுமிக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சோதனை நடத்திய போது தான், சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது, சக்கரமல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ், ஏழுமலை ஆகியோர் தான் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

இதை தொடர்ந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், சக்கரமல்லூர் விரைந்த போலீசார்,
சதீஷ், ஏழுமலை ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisement:

Related posts

எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது: டிடிவி.தினகரன்

Niruban Chakkaaravarthi

”விஷம் போல் உயரும் விலைவாசி”- மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Jayapriya

பெண்களிடம் ஆபாசமாக பேட்டி… யூடியூப் சேனல் குழுவினர் 3 பேர் கைது!

Saravana

Leave a Comment