இந்தியா சினிமா முக்கியச் செய்திகள்

கொரோனாவால் பாதிப்பு: பிரபல நடிகர் ஐசியூ-விற்கு மாற்றம்!

கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸால் நடிகர், நடிகைகளும் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான ரன்தீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர் இந்தி நடிகைகள் கரீஷ்மா கபூர், கரீனா கபூர் ஆகியோர் தந்தை .

இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உதவியாளர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரன்தீர் கபூர், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய ரன்தீர் கபூர், ’கொரோனா எனக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. லேசான காய்ச்சல் மட்டுமே இருந்தது. வேறு எந்த பெரிய பிரச்னையும் இல்லை. மூச்சுத்திணறல் ஏதுமில்லை. காய்ச்சலும் இப்போது நின்று விட்டது. சில பரிசோதனைகளுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியிருக்கி றார்கள்’ என்று கூறியுள்ளார்.
…….

Advertisement:

Related posts

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேட்புமனு தாக்கல்!

Jeba

சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்: அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா

Karthick

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

Karthick