சினிமா செய்திகள் முக்கியச் செய்திகள்

பான் இந்தியா படத்தில் மீண்டும் ராணா

பிரபல நடிகர் ராணா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் பான் இந்தியா படம் ஒன்றில் மீண்டும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

பிரபல தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததற்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகனான இவர், தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூரு நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்தியிலும் நடித்து வரும் ராணா, கடைசியாக பிரபு சாலமன் இயக்கிய ’காடன்’ படத்தில் நடித்திருந்தார். பான் இந்தியா படமாக, இது தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட சில மொழிகளில் வெளியானது.

இதையடுத்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்க இருக்கிறார். இப்போது பிரியாமணி, சாய் பல்லவி, நந்திதா தாஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோருடன் விரத பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

இதையடுத்து அவர் மீண்டும் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கிறார். மூத்த தயாரிப்பாளர் கோபிநாத் அச்சந்தா, ராம்பாபுவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்க போகும் டைரக்டர், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

Advertisement:

Related posts

புயல் நிவாரணம் வழங்ககோரி போராடியவர்கள் மீதுள்ள வழக்குகள் தளுப்படிசெய்யப்படும் – ஸ்டாலின் உறுதி

Gayathri Venkatesan

பாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாதா? பிரேமலதா பதில்!

Ezhilarasan

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது!

Gayathri Venkatesan