ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கண்டிலான் கிராமத்தில் உள்ள முதுகுலத்தூர் தொகுதியில் 626 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச்சாவடி மையமானது சத்துணவு வழங்கும் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் இன்று காலை மழை பெய்துள்ளதால், அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியின் மேற்கூரை வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரப்பரப்பு காணப்பட்டது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், படுகாயம் அடைந்தவர்கள் தாமோதரன், புவனேஸ்வரி, முனியசாமி, பூமி கிருஷ்ணன், முருகன் எனத் தெரியவந்துள்ளது.
Advertisement: