தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், டிஜிபி திரிபாதி மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னையைத் தவிர பிற மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருவதால், பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கட்டுப்படுகளை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, இன்று, பிரதமர் மோடியுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் கலந்து கொள்கிறார்.
Advertisement: