சினிமா முக்கியச் செய்திகள்

’கே.வி.ஆனந்த் மறைவு அதிர்ச்சியளிக்கிறது’: ரஜினிகாந்த் ட்வீட்

இயக்குநர் கே. வி. ஆனந்த் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோ, அயன், மாற்றான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 1995ஆம் ஆண்டில் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை இவர் பெற்றார். 2008ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காகச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருதையும் கே.வி. ஆனந்த் பெற்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 3மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் இவரது மரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா, நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து, ரஜினிகாந்த், தனுஷ், இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவரது மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ’மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Advertisement:

Related posts

தமிழகத் தேர்தலில் அரசியல் வாரிசுகள் யார்? யார்?

Karthick

நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு; கொரோனா பரவல் தொடர்பாக விசாரணை!

Saravana

இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

Ezhilarasan