தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.அசாம், மேற்கு வங்கத்திலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடிக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். மேலும் அவர் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து அனைவருக்கும் முன்மாதிரியாக திழந்தார்.
Advertisement: