இந்தியா முக்கியச் செய்திகள்

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனிடையே அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அசோக் கெலாட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், தான் நலமாக இருப்பதாகவும் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளின்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

Advertisement:

Related posts

அகமதாபாத் சென்றடைந்தனர் இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள்!

Niruban Chakkaaravarthi

வாக்களித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

L.Renuga Devi

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!

Saravana