இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்குத்தான் ஆளுநரைவிடக் கூடுதல் அதிகாரம் உள்ளது. ஆனால் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்கிறது. இந்த மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஓய்எஸ்ஆர், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த திங்கள்கிழமை அன்று மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த எதிர்ப்பால் அவை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவை கூடியபோது மீண்டும் மசோதாவைப்பற்றிய விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement:

Related posts

BAFTA விருது அமைப்புடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…. திறமைசாலிகளை கண்டறிய ஆயத்தம்!

Nandhakumar

உலகின் மிக்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர்

Karthick

வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது

Gayathri Venkatesan