இந்தியா செய்திகள் தொழில்நுட்பம்

வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

ஏப்ரல் 2ம் தேதிக்குள் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எங்கு எப்போது பெய்யும்?

வங்காள விரி குடாவில் ஏற்பட்டுள்ள வலுவான கீழ்-நிலை தென்மேற்கு காற்றழுத்தத்தினால் மார்ச் 29ம்-தேதி முதல் ஏப்ரல் 2ம்-தேதி வரை வடகிழக்கு மாநிலங்களில் இடி மின்னலுடன் பரவலாகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம்!

மார்ச்-30 முதல் ஏப்ரல்-1ம் தேதிவரை கனமழை காரணத்தினால் தெற்கு அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் தாழ்வான
பகுதிகள் நீரில் மூழ்குவது போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிக மழைபொழிவு காரணமாகச் சாலைகளில் நீர் தேங்குவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படலாம், சிறிய குட்சா சாலைகள் சேதமடையலாம் மற்றும்
நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!

Gayathri Venkatesan

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்!

Gayathri Venkatesan

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்புமனு தாக்கல்

Jeba