தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன் என்றார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம் விளங்குகிறது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்து மொழி, கலாச்சாரம், மதங்களை காக்க துணை நிற்பேன் என தெரிவித்தார்.
Advertisement: