சில நாட்களில் தமிழகம் வரவிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அதற்கு அனைத்து கட்சிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு சென்றார். அங்கு அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நல்ல உற்சாகத்தை அளித்தது.
இதையடுத்து வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அவரின் தமிழக வருகை மார்ச் முதல் வாரத்திற்கு தள்ளிப்போகியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement: