தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“நானும், ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை” – சரத்குமார் அறிவிப்பு

மநீம கூட்டணியில் சமக போட்டியிடும் 37 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக, மநீம போன்ற கட்சிகள் தங்களது கூட்டணி கட்சியினருடனான தொகுதிப் பங்கீடை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

இதுவரை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி இன்று தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மைய கூட்டணியில் 40 தொகுதிகள் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒத்துக்கப்பட்டிருந்த நிலையில், 3 தொகுதிகளை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்க கூறியதால், மீண்டும் மக்கள் நீதி மையத்திடம் கொடுத்துவிட்டோம். தற்போது 37 தொகுதிகளில் மட்டுமே சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் நானும், எனது மனைவி ராதிகா சரத்குமாரும் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

Jayapriya

கண்டிப்பாக ‘Agree’ கொடுக்க வேண்டும்… பரபரப்பாக பேசப்படும் வாட்ஸ் அப்பின் புதிய பிரைவசி பாலிசி!

Jayapriya

மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை பேசி வருகிறார்; அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்!

Saravana