சினிமா செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி!

திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட அக்கட்சி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று திமுக கட்சி வெளியிட்டது. அதில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உதயநிதிக்கு, திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கண்ணே கலைமானே திரைப்படத்தில் உதயநிதியை கதாநாயகனாக வைத்து இயக்கிய, இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து குறிப்பில், எனது தயாரிப்பாளரும் கதாநாயகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு சேப்பாக்கம் தொகுதியில் மிக பெரியளவில் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.” எனக் கூறியிருந்தார்.

இயக்குநர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்டங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: மாநிலங்களுக்கு உத்தரவு!

Jeba

ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; அரசியல் எதிரிகளின் சதி என அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Saravana

“சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்

Gayathri Venkatesan