செய்திகள் முக்கியச் செய்திகள்

கேள்விக்குறியான மதுரை சித்திரை திருவிழா!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழா நடைபெறுமா என்ற கேள்விக்குறியாகியுள்ளது.

கோவில் மாநகரம் என்று அழைக்கப்படும் மதுரையின் பிரதான விழாவான சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இவ்விழா 10நாட்கள் நடைபெறும். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட மக்களின் முக்கிய விழாவாக கருதப்படுகிறது.

முக்கிய நிகழ்வாக தேரோட்டம், திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்குவதுதான் அதிலும் அழகர் ஆற்றில் இறங்கும் போது என்ன பட்டு உடுத்துகிறார் என்பது அன்றைய தினத்தின் பேசுப்பொருளாகவே இருக்கும். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு அறிவித்த நிலையில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்.15-ம் தேதி தொடங்குகிறது. ஏப்.24-ல் திருக்கல்யாணம், ஏப்.25-ல் தேரோட்டம், ஏப்.26 எதிர்சேவை, 27-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளால் இந்தாண்டும் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement:

Related posts

ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!

L.Renuga Devi

சென்னையில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள்!

Jeba

சென்னையில் போட்டியிடும் திரைபிரபலங்கள் யார்? எங்கு போட்டியிடுகிறார்கள்?

Jeba