இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

இளைஞர்களுக்கு அவசரமாக கொரோனா தடுப்பூசி தேவை: பிரதமரிடம் பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரசால் பஞ்சாபை சேர்ந்த் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசரமாகத் தடுப்பூசி தேவைப்படுவதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா வைரசின் இரண்டாம் அலை வீசிவரும் நிலையில், இங்கிலாந்திலிருந்து பரவிய உருமாறிய கொரோனா தொற்று பஞ்சாப் மாநிலத்தின் 81% சதவிகித இளைஞர்களைத் தாக்கியுள்ளது. இதனால், உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை விரைந்து அளிக்க வேண்டும் என்றும் அம்மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட 401 மாதிரிகளில், இங்கிலாந்திலிருந்து பரவிய உருமாறிய கொரோனா தொற்று 81% பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் B117 என்ற வகுப்பைச் சார்ந்த மரபணு மாற்றமடைந்த தொற்று இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது என்பதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

உள்நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி இந்த மரபணு மாற்றமடைந்த தொற்றை எதிர்த்துச் செயல்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பஞ்சாப்பில் அதிகப்படியான இளைஞர்கள் தொடர்ந்து உருமாற்றமடைந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் தங்களுக்கு தேவையான அளவு தடுப்பூசியை விரைந்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisement:

Related posts

எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் வெல்ல முடியாது: முதல்வர் பழனிசாமி

Ezhilarasan

முதல்வர் அலுவலகத்தில் பேரறிவாளன் மனு!

Niruban Chakkaaravarthi

விலையுயர்ந்த காரை காபி கடையாக மாற்றியுள்ள இளைஞர்..

Ezhilarasan