புதுக்கோட்டையில் மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதிமன்றம்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனை கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் படேல் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் படேலுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி சத்யா.
Advertisement: