செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

புதுவையில் நாளை வாக்குபதிவு!

புதுச்சேரியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது, இதையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை, வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.


புதுச்சேரி தேர்தலில் வாக்குபதிவு செய்ய 1,558 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1, 677 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,558 வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரங்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று பிற்பகலுக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்காக மொத்தம் 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement:

Related posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பதில்!

Ezhilarasan

தேர்தலில் நடிகை குஷ்பூ போட்டி?

Niruban Chakkaaravarthi

”கமல்ஹாசன் தமிழகத்தில் சீரமைப்பதற்கு ஒன்றுமில்லை”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Jayapriya