இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் ரங்கசாமி, நாராயணசாமி, வாக்களித்தனர்!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதான அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மிஷன் வீதியில் உள்ள அரசு மகளிர் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளதாகக் கூறினார்.

இதேபோன்று, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார். புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 20.07% வாக்குப்பதிவு பதிவாகிவுள்ளது.

Advertisement:

Related posts

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

Gayathri Venkatesan

அதிநவீன எஃப்-18 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா!

Dhamotharan

புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து நிச்சயம் வேலை செய்யும்; மத்திய அரசு தகவல்!

Saravana